×
الرعدவசனம் 30

அல்-முக்தஸர்

كَذَٰلِكَ أَرْسَلْنَـٰكَ فِىٓ أُمَّةٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهَآ أُمَمٌ لِّتَتْلُوَا۟ عَلَيْهِمُ ٱلَّذِىٓ أَوْحَيْنَآ إِلَيْكَ وَهُمْ يَكْفُرُونَ بِٱلرَّحْمَـٰنِ ۚ قُلْ هُوَ رَبِّى لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ مَتَابِ ﴿٣٠﴾

தூதரே!- நாம் முந்தைய சமூகங்களின் பக்கம் தூதர்களை அனுப்பியது போன்றே உம் சமூகத்தின் பக்கமும், நாம் உமக்கு வஹி மூலம் அறிவிக்கும் குர்ஆனை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்காக, உம்மை தூதராக அனுப்பினோம், அது உமது நம்பகத்தன்மையை எடுத்துரைக்கப் போதுமானது. ஆயினும் உமது சமூகத்தினர் இந்த அற்புதத்தை அறிந்து கொண்டே நிராகரிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் அளவிலாக் கருணையாளனுக்கு இணைகளை ஏற்படுத்தி அவனை நிராகரிக்கிறார்கள். தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “நீங்கள் யாருக்கு ஏனைய தெய்வங்களை இணைவைத்துக்கொண்டுள்ளீர்களோ அந்தக் கருணையாளன்தான் என் இறைவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை. என்னுடைய எல்லா விவகாரங்களிலும் அவனையே சார்ந்துள்ளேன். அவன் பக்கமே நான் திரும்புகின்றேன்.