×
إبراهيمவசனம் 1

அல்-முக்தஸர்

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ الٓر ۚ كِتَـٰبٌ أَنزَلْنَـٰهُ إِلَيْكَ لِتُخْرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ ﴿١﴾

(الٓر) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. -தூதரே!- அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் உதவியைப் பெற்று நீர் மக்களை நிராகரிப்பு, அறியாமை, வழிகேடு ஆகியவற்றிலிருந்து வெளியேற்றி ஈமான், அறிவு, இஸ்லாமிய மார்க்கத்திற்கான வழிகாட்டல் ஆகியவற்றின் பக்கம் கொண்டு வருவதற்காகவே நாம் இந்த குர்ஆனை உம்மீது இறக்கியுள்ளோம். இஸ்லாமிய மார்க்கமே யாவற்றையும் மிகைத்த அல்லாஹ்வின் பாதையாகும். அவனை யாராலும் மிகைக்க முடியாது. எல்லாவற்றிலும் அவன் புகழுக்குரியவன்.