×
إبراهيمவசனம் 24

அல்-முக்தஸர்

أَلَمْ تَرَ كَيْفَ ضَرَبَ ٱللَّهُ مَثَلًا كَلِمَةً طَيِّبَةً كَشَجَرَةٍ طَيِّبَةٍ أَصْلُهَا ثَابِتٌ وَفَرْعُهَا فِى ٱلسَّمَآءِ ﴿٢٤﴾

தூதரே!- “லாயிலாஹ இல்லல்லாஹ்” என்ற ஓரிறைக் கொள்கையின் வார்த்தைக்கு அல்லாஹ் எவ்வாறு உதாரணம் கூறுகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும். அது பேரீச்சை மரமாகும். அது அதன் நல்ல வேர்களின் மூலமாக நீரை உறிஞ்சி அதன் தண்டு பூமியில் நிலையாக இருக்கிறது. அதன் கிளைகள் வானத்தின்பால் உயர்ந்து மழைத் துளிகளிலிருந்து நீரை உறிஞ்சுகிறது; நல்ல காற்றையும் சுவாசிக்கிறது.