×
إبراهيمவசனம் 5

அல்-முக்தஸர்

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَـٰتِنَآ أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ ﴿٥﴾

நாம் மூஸாவை அனுப்பினோம். அவரது நம்பகத் தன்மையையும், அவர் தன் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டவர் என்பதை அறிவிக்கும் சான்றுகளைக் கொண்டு அவரை வலுப்படுத்தினோம். அவருடைய சமூகத்தை நிராகரிப்பு, அறியாமை என்பவற்றிலிருந்து ஈமான், அறிவு ஆகியவற்றின் பக்கம் வெளியேற்றுமாறு நாம் அவருக்குக் கட்டளையிட்டோம். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்த நாட்களை அவர்களுக்கு நினைவூட்டுமாறு நாம் அவருக்குக் கட்டளையிட்டோம். நிச்சயமாக இந்த நாட்களில், அல்லாஹ்வின் ஏகத்துவத்தையும், அவனுடைய மகத்தான வல்லமையையும், நம்பிக்கையாளர்களின் மீது அவனது அருள் புரிதலையும் அறிவிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவனுடைய அத்தாட்சி, அருட்கொடைகளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்தும் பொறுமையாளர்கள்தாம் இந்த நாட்களைக் கொண்டு பயனடைவார்கள்.