அல்-முக்தஸர்
هَـٰذَا بَلَـٰغٌ لِّلنَّاسِ وَلِيُنذَرُوا۟ بِهِۦ وَلِيَعْلَمُوٓا۟ أَنَّمَا هُوَ إِلَـٰهٌ وَٰحِدٌ وَلِيَذَّكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ ﴿٥٢﴾
முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இந்த குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து மக்களுக்கு வந்த அறிவிப்பாகும். இதிலுள்ள கடுமையான எச்சரிக்கைகளைக் கொண்டு அவர்களை அச்சமூட்டுவதற்காகவும் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான இறைவன் என்பதை அறிந்து அவனுக்கு யாரையும் இணையாக்காது அவனை வணங்க வேண்டும் என்பதற்காகவும் நேர்த்தியான அறிவுடையவர்கள் அறிவுரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் இது வந்துள்ளது. ஏனெனில் அவர்களே உபதேசங்களையும், படிப்பினைகளையும் கொண்டு பயனடைவார்கள்.