அல்-முக்தஸர்
إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِـَٔايَـٰتِ ٱللَّهِ لَا يَهْدِيهِمُ ٱللَّهُ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿١٠٤﴾
அல்லாஹ்வின் வசனங்கள் அவனிடமிருந்தே வந்துள்ளன என்பதை உண்மைப்படுத்தாதவர்களுக்கு அவர்கள் அதில் நிலைத்திருக்கும் வரை அவன் நேர்வழிகாட்ட மாட்டான். அல்லாஹ்வை நிராகரித்து அவனுடைய வசனங்களை பொய்பித்ததனால் அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனை உண்டு.