×
النحلவசனம் 108

அல்-முக்தஸர்

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ طَبَعَ ٱللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَـٰرِهِمْ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْغَـٰفِلُونَ ﴿١٠٨﴾

நம்பிக்கைகொண்ட பிறகு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிட்ட இவர்கள் அறிவுரைகளை புரிந்துகொள்ள முடியாமல் அவர்களின் உள்ளங்களிலும், அவற்றைச் செவியுற்று பயனடைய முடியாமல் செவிகளிலும், ஈமானுக்கான சான்றுகளைக் கண்டுகொள்ள முடியாமல் பார்வைகளிலும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தாம் பாக்கியம் மற்றும் துர்பாக்கியத்தின் காரணங்களையும் அல்லாஹ் அவர்களுக்காக தயார்படுத்தி வைத்துள்ள வேதனையையும் அறியாமல் அலட்சியமாக இருப்பவர்கள்.