×
النحلவசனம் 118

அல்-முக்தஸர்

وَعَلَى ٱلَّذِينَ هَادُوا۟ حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَيْكَ مِن قَبْلُ ۖ وَمَا ظَلَمْنَـٰهُمْ وَلَـٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ ﴿١١٨﴾

குறிப்பாக யூதர்கள் மீது நாம் உமக்கு ஏற்கனவே எடுத்துக்கூறியவற்றைத் தடைசெய்திருந்தோம். (பார்க்க, அல்அன்ஆம் என்ற அத்தியாயத்தின் 146 வது வசனம்) நாம் அவற்றைத் தடைசெய்து அவர்கள்மீது அநீதி இழைக்கவில்லை. ஆனால் அவர்கள்தாம் தமக்குத் தாமே அநீதி இழைத்து தண்டனைக்கான காரணிகளைத் தேடிக் கொண்டார்கள். நாம் அவர்களின் அநியாயத்திற்குத்தான் தண்டனை வழங்கினோம். அவர்களைத் தண்டிக்கும்பொருட்டே நாம் அவர்கள் மீது அவற்றைத் தடைசெய்தோம்.