×
النحلவசனம் 12

அல்-முக்தஸர்

وَسَخَّرَ لَكُمُ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ وَٱلنُّجُومُ مُسَخَّرَٰتٌۢ بِأَمْرِهِۦٓ ۗ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ ﴿١٢﴾

நீங்கள் ஓய்வெடுப்பதற்காகவும் அமைதி பெறுவதற்காகவும் இரவையும், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை சம்பாதிப்பதற்காக பகலையும் அவன் ஆக்கித் தந்துள்ளான். சூரியனை உங்களுக்காக வசப்படுத்தி அதனை ஒளிமிக்கதாகவும் சந்திரனை பிரகாசமானதாகவும் ஆக்கியுள்ளான். அவனது விதியின் பிரகாரம் நட்சத்திரங்கள் உங்களுக்கு வசப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தரை மற்றும் கடலின் இருள்களில் நீங்கள் வழிகாட்டலைப் பெறுகின்றீர்கள். நேரங்களையும் இன்னுப் பலவற்றையும் அறிந்து கொள்கிறீர்கள். இவையனைத்தையும் வசப்படுத்தித் தந்துள்ளதில் அறிவைப் பயன்படுத்தும் மக்களுக்கு அல்லாஹ்வின் வல்லமையை அறிவிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்கள்தாம் அவற்றின் நோக்கத்தை உணர்ந்து கொள்வார்கள்.