×
النحلவசனம் 127

அல்-முக்தஸர்

وَٱصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِٱللَّهِ ۚ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِى ضَيْقٍ مِّمَّا يَمْكُرُونَ ﴿١٢٧﴾

தூதரே!- அவர்கள் தரும் தொல்லைகளை பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. அல்லாஹ்வே உமக்கு பொறுமையை மேற்கொள்வதற்கான பாக்கியம் அளிக்க முடியும். நிராகரிப்பாளர்கள் உம்மைப் புறக்கணிப்பதைக் கண்டு நீர் கவலை கொள்ளாதீர். அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளால் உமது உள்ளம் நெருக்கடிக்குள்ளாகிவிட வேண்டாம்.