×
النحلவசனம் 14

அல்-முக்தஸர்

وَهُوَ ٱلَّذِى سَخَّرَ ٱلْبَحْرَ لِتَأْكُلُوا۟ مِنْهُ لَحْمًا طَرِيًّا وَتَسْتَخْرِجُوا۟ مِنْهُ حِلْيَةً تَلْبَسُونَهَا وَتَرَى ٱلْفُلْكَ مَوَاخِرَ فِيهِ وَلِتَبْتَغُوا۟ مِن فَضْلِهِۦ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ ﴿١٤﴾

நீங்கள் புத்தம் புது கடல் மீனைப் பிடித்து உண்பதற்கும், நீங்களும் உங்களின் பெண்களும் அலங்காரத்திற்காக அணியும் முத்து போன்ற ஆபரணங்களை எடுப்பதற்கும் அவனே கடலை வசப்படுத்தித் தந்துள்ளான். எனவே உங்களுக்கு அதில் பயணம் செய்து அதிலுள்ளவற்றைக் கண்டடுப்பதற்கு வசதிகளை ஏற்படுத்தித்தந்தான். கடல் அலைகளைக் கிழித்துக் கொண்டு கப்பல்கள் செல்வதை நீர் காண்பீர். வியாபார இலாபத்தில் கிடைக்கும் அல்லாஹ்வின் அருளைத் தேடியும் அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தி, அவன் ஒருவனையே வணங்குவதற்காகவும் நீங்கள் அந்த கப்பல்களில் பயணம் செய்கிறீர்கள்.