×
النحلவசனம் 22

அல்-முக்தஸர்

إِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَٰحِدٌ ۚ فَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ ﴿٢٢﴾

உங்களின் உண்மையான வணக்கத்திற்குரியவன் ஒருவனே. அவனுக்கு யாதொரு இணையுமில்லை. அவனே அல்லாஹ். மறுமையில் கூலி கொடுக்கப்படுவதற்காக மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதை மறுப்பவர்களின் உள்ளங்கள் அல்லாஹ் ஒருவனே என்பதை மறுக்கின்றன. ஏனெனில் அவைகள் அஞ்சுவதில்லை, கூலி கொடுக்கப்படுவதையோ விசாரணை செய்யப்படுவதையோ நம்புவதில்லை. அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாத, அதற்கு அடிபணியாத கர்வம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.