அல்-முக்தஸர்
ٱلَّذِينَ تَتَوَفَّىٰهُمُ ٱلْمَلَـٰٓئِكَةُ ظَالِمِىٓ أَنفُسِهِمْ ۖ فَأَلْقَوُا۟ ٱلسَّلَمَ مَا كُنَّا نَعْمَلُ مِن سُوٓءٍۭ ۚ بَلَىٰٓ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ﴿٢٨﴾
மரணத்தின் வானவரும் அவருடைய உதவியாளர்களும் அல்லாஹ்வை நிராகரித்து தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்டவர்களின் உயிர்களைக் கைப்பற்றும் போது தங்களைத் தாக்கும் மரணத்தைக் கண்டு அவர்கள் முழுமையாக சரணடைந்து விடுவார்கள். தமது நிராகரிப்பையும் பாவங்களையும் மறுப்பது தமக்குப் பயனளிக்கும் என நினைத்து அவற்றை அவர்கள் மறுப்பார்கள். அப்போது அவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் பொய் கூறுகிறீர்கள். பாவங்கள் புரியும் நிராகரிப்பாளர்களாக இருந்தீர்கள். நீங்கள் உலகில் செய்து கொண்டிருந்த அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.