அல்-முக்தஸர்
وَأَقْسَمُوا۟ بِٱللَّهِ جَهْدَ أَيْمَـٰنِهِمْ ۙ لَا يَبْعَثُ ٱللَّهُ مَن يَمُوتُ ۚ بَلَىٰ وَعْدًا عَلَيْهِ حَقًّا وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ ﴿٣٨﴾
உயிர் கொடுத்து எழுப்பப்படுவதைப் பொய்பிக்கக்கூடிய இவர்கள் உறுதியாக, எல்லை கடந்து, சத்தியமிட்டுக் கூறுகிறார்கள், “அல்லாஹ் மரணித்தவர்களை ஒருபோதும் எழுப்ப மாட்டான் என்று.” அவர்களிடம் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மாறாக அவன் மரணித்தவர்களை நிச்சயம் உயிர் கொடுத்து எழுப்புவான். இது அவனுடைய உறுதியான வாக்குறுதியாகும். ஆயினும் மக்களில் பெரும்பாலோர் மரணித்தவர்களை அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்புவான் என்பதை அறியமாட்டார்கள். எனவேதான் மறுமையில் உயிர் கொடுத்து எழுப்புவதை மறுக்கிறார்கள்.