அல்-முக்தஸர்
وَمَا بِكُم مِّن نِّعْمَةٍ فَمِنَ ٱللَّهِ ۖ ثُمَّ إِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فَإِلَيْهِ تَجْـَٔرُونَ ﴿٥٣﴾
மனிதர்களே!- நீங்கள் அனுபவிக்கும் மார்க்க, உலக, அருட்கொடைகள் யாவும் அல்லாஹ்விடமிருந்தே கிடைத்ததாகும். வேறு யாரிடமும் அல்ல. பின்னர் உங்களை வறுமையோ, நோயோ, துன்பமோ தாக்கிவிட்டால் அதனை நீக்குவதற்காக அவனிடமே நீங்கள் பிராா்த்தித்து மன்றாடுகிறீர்கள். உங்களுக்கு அருட்கொடைகள் அளிக்கும், துன்பத்தைப் போக்கும் இறைவன் மாத்திரமே வணங்கப்படுவது கட்டாயமாகும்.