அல்-முக்தஸர்
وَمَآ أَنزَلْنَا عَلَيْكَ ٱلْكِتَـٰبَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمُ ٱلَّذِى ٱخْتَلَفُوا۟ فِيهِ ۙ وَهُدًى وَرَحْمَةً لِّقَوْمٍ يُؤْمِنُونَ ﴿٦٤﴾
தூதரே!- ஓரிறைக் கொள்கை, மறுமை நாள், மார்க்கத்தின் சட்டதிட்டங்கள் ஆகிய மக்கள் முரண்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்களைக் குறித்து நீர் அவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே நாம் உம்மீது குர்ஆனை இறக்கியுள்ளோம். அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் அல்குர்ஆன் கொண்டு வந்துள்ளதன் மீதும் நம்பிக்கை கொண்ட நம்பிக்கையாளர்களுக்கு அது வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கின்றது. அவர்கள்தாம் சத்தியத்தைக் கொண்டு பயனடையக் கூடியவர்களாவர்.