×
النحلவசனம் 71

அல்-முக்தஸர்

وَٱللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ فِى ٱلرِّزْقِ ۚ فَمَا ٱلَّذِينَ فُضِّلُوا۟ بِرَآدِّى رِزْقِهِمْ عَلَىٰ مَا مَلَكَتْ أَيْمَـٰنُهُمْ فَهُمْ فِيهِ سَوَآءٌ ۚ أَفَبِنِعْمَةِ ٱللَّهِ يَجْحَدُونَ ﴿٧١﴾

அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய வாழ்வாதாரத்தில் சிலரைவிட சிலரை சிறப்பித்துள்ளான். உங்களில் ஏழை, பணக்காரன், தலைவன், தொண்டன் ஆகியவர்களை ஏற்படுத்தியுள்ளான். யாருக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தில் சிறப்பை வழங்கியுள்ளானோ அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டதை தங்களின் அடிமைகளுக்கு அளித்து அவர்களையும் உரிமையில் சமமானவர்களாக ஆக்குவதில்லை. எனவே தங்களின் அடிமைகள் தங்களுக்கு இணையானவர்களாக இருப்பதை அவர்கள் விரும்பாத போது, எவ்வாறு அல்லாஹ்வின் அடிமைகள் அவனுக்கு இணையாக இருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்? இது எவ்வளவு பெரும் அநியாயம்! அல்லாஹ்வின் அருட்கொடைகளை மறுப்பதற்கு இதை விட என்ன உள்ளது?!