×
النحلவசனம் 75

அல்-முக்தஸர்

ضَرَبَ ٱللَّهُ مَثَلًا عَبْدًا مَّمْلُوكًا لَّا يَقْدِرُ عَلَىٰ شَىْءٍ وَمَن رَّزَقْنَـٰهُ مِنَّا رِزْقًا حَسَنًا فَهُوَ يُنفِقُ مِنْهُ سِرًّا وَجَهْرًا ۖ هَلْ يَسْتَوُۥنَ ۚ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ ﴿٧٥﴾

அல்லாஹ் இணைவைப்பாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு உதாரணம் கூறுகிறான்: ஒருவர் எதையும் செய்யமுடியாத ஓர் அடிமை. அவரிடம் செலவு செய்வதற்கும் எதுவும் இல்லை. மற்றொருவர் சுதந்திரமானவர். நாம் அவருக்கு தூய்மையான செல்வங்களை வழங்கியுள்ளோம். தான் விரும்பியவாறு அதனை அவர் செலவளிக்கிறார். விரும்பியவாறு அவர் அதிலிருந்து வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செலவு செய்கிறார். இந்த இருவரும் சமமாவார்களா என்ன? அவ்வாறிருக்கும் போது, தன் ஆட்சியில் தான் நாடியவாறு செயல்படும் அல்லாஹ்வையும் எதுவும் செய்ய இயலாத உங்கள் சிலைகளையும் எவ்வாறு சமமாக்குகிறீர்கள்? புகழனைத்தும் புகழுக்குத் தகுதியான அல்லாஹ்வுக்கே உரியது. ஆனால் இணைவைப்பாளர்களில் பெரும்பாலானோர் அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியானவன் என்பதை அறிய மாட்டார்கள்.