×
النحلவசனம் 77

அல்-முக்தஸர்

وَلِلَّهِ غَيْبُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَمَآ أَمْرُ ٱلسَّاعَةِ إِلَّا كَلَمْحِ ٱلْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ ﴿٧٧﴾

வானங்களிலும் பூமியிலும் மறைவாக இருப்பவற்றை அல்லாஹ் மட்டுமே அறிவான். அந்த அறிவுக்கு அவன் மட்டுமே உரித்தானவன். படைப்பினங்களில் வேறு யாரும் அவற்றை அறிய மாட்டார்கள். மறைவான விஷயங்களில் உள்ளடங்கியுள்ள மறுமை நிகழ்வும் அவன் நாடினால் கண்ணை திறந்து இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்து விடும். மாறாக அதை விடவும் விரைவாக நிகழ்ந்து விடும். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனிடமிருந்து தப்ப முடியாது. அவன் ஏதேனும் ஒன்றை செய்ய நாடினால் ‘ஆகு’ என்றுதான் கூறுகிறான். உடனே அது ஆகிவிடும்.