அல்-முக்தஸர்
وَإِذَا رَءَا ٱلَّذِينَ أَشْرَكُوا۟ شُرَكَآءَهُمْ قَالُوا۟ رَبَّنَا هَـٰٓؤُلَآءِ شُرَكَآؤُنَا ٱلَّذِينَ كُنَّا نَدْعُوا۟ مِن دُونِكَ ۖ فَأَلْقَوْا۟ إِلَيْهِمُ ٱلْقَوْلَ إِنَّكُمْ لَكَـٰذِبُونَ ﴿٨٦﴾
இணைவைப்பாளர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வை விடுத்து தாங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களைக் காணும் போது கூறுவார்கள்: “எங்கள் இறைவா! இவர்கள்தாம் உன்னை விடுத்து நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள்.” தங்களின் பாவங்களை அவர்கள் மீது சுமத்திவிடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ் அந்த தெய்வங்களை பேச வைப்பான். அவை பதிலளிக்கும்: -“இணைவைப்பாளர்களே!- நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி வணங்கியதில் நீங்கள் பொய்யர்களே. அவனோடு இணையாக வணங்கப்படுவதற்கு யாரும் இல்லை.”