×
النحلவசனம் 89

அல்-முக்தஸர்

وَيَوْمَ نَبْعَثُ فِى كُلِّ أُمَّةٍ شَهِيدًا عَلَيْهِم مِّنْ أَنفُسِهِمْ ۖ وَجِئْنَا بِكَ شَهِيدًا عَلَىٰ هَـٰٓؤُلَآءِ ۚ وَنَزَّلْنَا عَلَيْكَ ٱلْكِتَـٰبَ تِبْيَـٰنًا لِّكُلِّ شَىْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَىٰ لِلْمُسْلِمِينَ ﴿٨٩﴾

தூதரே!- நாம் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு தூதரை அவர்களது நிராகரிப்பு அல்லது நம்பிக்கை என்பவற்றுக்கு சாட்சி கூறுவதற்கு எழுப்பும் நாளை நினைவு கூர்வீராக! இந்த தூதர் அவர்களின் இனத்தைச் சார்ந்தவராக, அவர்களின் மொழியைப் பேசக்கூடியவராக உள்ளார். -தூதரே!- சமூகங்கள் அனைத்திற்கும் உம்மை சாட்சியாளராகக் கொண்டுவருவோம். ஆகுமானது, தடைசெய்யப்பட்டது, நற்கூலி, தண்டனை, ஏனைய விளக்கம் தேவையான அனைத்தையும் தெளிவுபடுத்துவதற்காக நாம் உம்மீது குர்ஆனை இறக்கியுள்ளோம். சத்தியத்தின் பக்கம் மக்களுக்கு வழிகாட்டவும் நம்பிக்கைகொண்டு அதன்படி செயல்படக்கூடியவர்களுக்கு அருளாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நிலையான அருட்கொடைகள் உண்டு என்று அவர்களுக்கு நற்செய்தி கூறக்கூடியதாகவும் அதனை நாம் இறக்கியுள்ளோம்.