அல்-முக்தஸர்
وَأَوْفُوا۟ بِعَهْدِ ٱللَّهِ إِذَا عَـٰهَدتُّمْ وَلَا تَنقُضُوا۟ ٱلْأَيْمَـٰنَ بَعْدَ تَوْكِيدِهَا وَقَدْ جَعَلْتُمُ ٱللَّهَ عَلَيْكُمْ كَفِيلًا ۚ إِنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا تَفْعَلُونَ ﴿٩١﴾
அல்லாஹ்விடம் செய்த அல்லது மக்களிடம் செய்த எல்லா ஒப்பந்தங்களையும் முழுமையாக நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒப்பந்தங்களை உறுதிப்படுத்திய பிறகு அதனை முறித்து விடாதீர்கள். நீங்கள் சத்தியம் செய்ததை நிறைவேற்றுவதாக அல்லாஹ்வையே சாட்சியாக ஆக்கியுள்ளீர்கள். நீங்கள் செய்யக் கூடியதை அல்லாஹ் நன்கறிந்தவன். எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.