×
النحلவசனம் 94

அல்-முக்தஸர்

وَلَا تَتَّخِذُوٓا۟ أَيْمَـٰنَكُمْ دَخَلًۢا بَيْنَكُمْ فَتَزِلَّ قَدَمٌۢ بَعْدَ ثُبُوتِهَا وَتَذُوقُوا۟ ٱلسُّوٓءَ بِمَا صَدَدتُّمْ عَن سَبِيلِ ٱللَّهِ ۖ وَلَكُمْ عَذَابٌ عَظِيمٌ ﴿٩٤﴾

உங்களின் சத்தியங்களை ஒருவரையொருவர் ஏமாற்றும் கருவியாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் மனஇச்சையைப் பின்பற்றி நீங்கள் விரும்பிய சமயத்தில் அதனை முறித்து விடவும், விரும்பினால் நிறைவேற்றவும் செய்யாதீர்கள். நீங்கள் இவ்வாறு செய்தால் உங்களின் பாதங்கள் நேர்வழியில் உறுதியான பின்னரும் நீங்கள் நெறிபிறழ்ந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் பாதையை விட்டு நெறிபிறழ்ந்ததனாலும் மற்றவர்களையும் நெறிபிறழச் செய்ததனாலும் நீங்கள் வேதனையை அனுபவிப்பீர்கள். உங்களுக்கு பல மடங்கு வேதனை உண்டு.