அல்-முக்தஸர்
مَا عِندَكُمْ يَنفَدُ ۖ وَمَا عِندَ ٱللَّهِ بَاقٍ ۗ وَلَنَجْزِيَنَّ ٱلَّذِينَ صَبَرُوٓا۟ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿٩٦﴾
மனிதர்களே!- உங்களிடம் இருக்கும் செல்வங்களும், இன்பங்களும், சுவண்டிகளும் அவை எவ்வளவு அதிகமாக இருந்தாலும் அழிந்துவிடக் கூடியவையே. அல்லாஹ்விடம் இருக்கும் கூலியே நிலையானது. நிலையானதை விட்டு விட்டு அழியக்கூடியதற்கு எவ்வாறு முன்னுரிமை அழிக்கிறீர்கள்? பொறுமையாக இருந்து தங்களின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவர்களுக்கு அவர்கள் செய்த நற்செயல்களுக்கான சிறந்த கூலியை வழங்கிடுவோம். அவர்கள் செய்த நன்மைகளுக்கு பத்திலிருந்து எழுநூறு வரை பன்மடங்கு நாம் கூலி வழங்கிடுவோம்.