அல்-முக்தஸர்
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ سُبْحَـٰنَ ٱلَّذِىٓ أَسْرَىٰ بِعَبْدِهِۦ لَيْلًا مِّنَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ إِلَى ٱلْمَسْجِدِ ٱلْأَقْصَا ٱلَّذِى بَـٰرَكْنَا حَوْلَهُۥ لِنُرِيَهُۥ مِنْ ءَايَـٰتِنَآ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ ﴿١﴾
அல்லாஹ் தூய்மையானவன் மகத்தானவன். ஏனெனில் வேறு யாராலும் செய்வதற்கு ஆற்றலில்லாததை செய்வதற்கு அவன் ஆற்றலுள்ளவன். அவனே தன் அடியார் முஹம்மதை உடலோடும் ஆன்மாவோடும் விழித்த நிலையில் இரவின் ஒரு பகுதியில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பழங்களினாலும் பயிர்களினாலும் நபிமார்களின் இல்லங்களினாலும் நாம் அருள்செய்த பைத்துல் முகத்தஸை நோக்கி தன் வல்லமையை அறிவிக்கக்கூடிய சில சான்றுகளைக் காட்டுவதற்காக அழைத்துச் சென்றான். நிச்சயமாக அவன் செவியேற்கக்கூடியவன். செவியேற்கப்படும் எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை. அவன் பார்க்கக்கூடியவன். பார்க்கப்படக்கூடிய எதுவும் அவனை விட்டு மறைவாக இல்லை.