×
الإسراءவசனம் 101

அல்-முக்தஸர்

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَىٰ تِسْعَ ءَايَـٰتٍۭ بَيِّنَـٰتٍ ۖ فَسْـَٔلْ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ إِذْ جَآءَهُمْ فَقَالَ لَهُۥ فِرْعَوْنُ إِنِّى لَأَظُنُّكَ يَـٰمُوسَىٰ مَسْحُورًا ﴿١٠١﴾

நாம் மூஸாவுக்கு அவருக்காக சாட்சி கூறக்கூடிய ஒன்பது தெளிவான சான்றுகளை வழங்கினோம். அவை: கைத்தடி, கை, பஞ்சம், விளைச்சல்களில் குறைபாடு, வெள்ளம், வெட்டுக்கிளி, பேன், தவளைகள், இரத்தம் (என்பவையாகும்). -தூதரே!- யூதர்களிடம், அவர்களின் முன்னோர்களிடம் மூஸா கொண்டுவந்த அச்சான்றுகளைக் குறித்து கேட்பீராக. ஃபிர்அவ்ன் அவரிடம் கூறினான்: “-மூசாவே!- நீர் அபூர்வமான விஷயங்களைக் கொண்டு வருவதனால் நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்ட மனிதர் என்று எண்ணுகிறேன்.”