அல்-முக்தஸர்
وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ ٱلْكِبَرَ أَحَدُهُمَآ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا ﴿٢٣﴾
அடியானே! உன் இறைவன் உனக்குப் பின்வரும் விஷயங்களைக் கட்டளையிட்டுள்ளான்: “நீங்கள் அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது. தாய், தந்தையருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக அவர்கள் முதுமையை அடைந்த பின்னர். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உன்னிடத்தில் இருக்கும் நிலையில் முதுமையை அடைந்துவிட்டால் “சீ” என்று அவர்களை உதாசீனப்படுத்தும் வார்த்தைகளைக் கூறிவிடக் கூடாது; அவர்களை விரட்டவோ வார்த்தைகளால் கடிந்து கொள்ளவோ கூடாது; அவர்களிடம் மென்மைகலந்த கண்ணியமான வார்த்தைகளைக் கூறு.