×
الإسراءவசனம் 25

அல்-முக்தஸர்

رَّبُّكُمْ أَعْلَمُ بِمَا فِى نُفُوسِكُمْ ۚ إِن تَكُونُوا۟ صَـٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلْأَوَّٰبِينَ غَفُورًا ﴿٢٥﴾

மனிதர்களே!- வணக்கத்திலும் நற்காரியங்களிலும் பெற்றோர் நலன் பேணுவதிலும் உங்களின் உள்ளங்களிலுள்ள மனத்தூய்மையை உங்களின் இறைவன் நன்கறிந்தவன். இவற்றில் உங்களின் எண்ணங்கள் சரியானதாக இருந்தால் நிச்சயமாக அவன் தன் பக்கம் திரும்பி பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களை மன்னிக்கக்கூடியவனாக இருக்கின்றான். தனது இறைவனுக்குக் கட்டுப்படுவதில், தாய், தந்தையருடன் நல்ல முறையில் நடந்துகொள்வதில் ஏற்பட்ட தவறுகளுக்காக யார் பாவமன்னிப்புத் தேடுவாறோ அவரை அல்லாஹ் மன்னித்து விடுகிறான்.