அல்-முக்தஸர்
وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ٱبْتِغَآءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا ﴿٢٨﴾
உன்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லாத காரணத்தால் நீ அல்லாஹ்வின் வாழ்வாதாரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்குக் கொடுக்காமல் நீ தவிர்ந்துகொண்டால் அவர்களிடம் இதமான வார்த்தையைக் கூறு. உதாரணமாக, அவர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக பிரார்த்தனை செய்வது அல்லது அல்லாஹ் தனக்கு செல்வத்தை வழங்கினால் தருவேன் என்று வாக்களிப்பது.