×
الإسراءவசனம் 40

அல்-முக்தஸர்

أَفَأَصْفَىٰكُمْ رَبُّكُم بِٱلْبَنِينَ وَٱتَّخَذَ مِنَ ٱلْمَلَـٰٓئِكَةِ إِنَـٰثًا ۚ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا ﴿٤٠﴾

வானவர்களை அல்லாஹ்வின் மகள்கள் என்று அழைப்பவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண்மக்களை அளித்துவிட்டு வானவர்களை தனக்கு பெண்மக்களாக ஏற்படுத்திக் கொண்டானா? நீங்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன். நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வுக்குப் பிள்ளை உண்டு எனக் கூறியது மாத்திரமின்றி நிராகரிப்பில் அதிகரித்துச் சென்று அவனுக்கு பெண்பிள்ளைகளே உண்டு என வாதிட்டு அவன் மீது மிகவும் மோசமான அவதூறைக் கூறியுள்ளீர்கள்.