அல்-முக்தஸர்
تُسَبِّحُ لَهُ ٱلسَّمَـٰوَٰتُ ٱلسَّبْعُ وَٱلْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَىْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِۦ وَلَـٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورًا ﴿٤٤﴾
வானங்களும் பூமியும் அவையிரண்டிலுமுள்ள படைப்புகளும் அல்லாஹ்வின் தூய்மையைப் பறைசாற்றுகின்றன. அவற்றிலுள்ள அனைத்தும் அவனது தூய்மையைப் பறைசாற்றுவதுடன் அவனைப் புகழ்ந்துகொண்டும் இருக்கின்றன. ஆனால் அவை எவ்வாறு அவனது தூய்மையைப் பறைசாற்றுகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்கள். உங்களின் மொழியில் அவனைப் புகழ்பவர்களைத்தான் உங்களால் புரிந்துகொள்ள முடியும். நிச்சயமாக அவன் சகிப்புத்தன்மை மிக்கவனாக இருக்கின்றான். உடனுக்குடன் தண்டித்துவிட
மாட்டான். தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும் அடியார்களை அவன் மன்னிக்கக் கூடியவனாகவும் இருக்கின்றான்.