×
الإسراءவசனம் 51

அல்-முக்தஸர்

أَوْ خَلْقًا مِّمَّا يَكْبُرُ فِى صُدُورِكُمْ ۚ فَسَيَقُولُونَ مَن يُعِيدُنَا ۖ قُلِ ٱلَّذِى فَطَرَكُمْ أَوَّلَ مَرَّةٍ ۚ فَسَيُنْغِضُونَ إِلَيْكَ رُءُوسَهُمْ وَيَقُولُونَ مَتَىٰ هُوَ ۖ قُلْ عَسَىٰٓ أَن يَكُونَ قَرِيبًا ﴿٥١﴾

அல்லது அவையிரண்டையும்விட நீங்கள் உங்கள் உள்ளங்களில் பெரிதாகக் கருதும் வேறொரு படைப்பாக ஆகிவிடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஆரம்பத்தில் படைத்தவாறே, நீங்கள் இருந்தவாறே மீண்டும் உங்களை உயிர்கொடுத்து எழுப்புவான். பிடிவாதம் கொண்ட இந்த இணைவைப்பாளர்கள் கூறுவார்கள்: “நாம் இறந்த பின் எங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புபவன் யார்?” நீர் அவர்களிடம் கூறுவீராக: “உங்களை முன்மாதிரியின்றி முதன் முறையாகப் படைத்தானே அவன்தான் உங்களை மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புவான். உன்னுடைய பதிலில் இருந்து அவர்கள் தூரமானவர்களாக பரிகாசமாக தம் தலையை அசைத்தவாறு கூறுவார்கள்: “எப்போது இந்த மீண்டும் எழுப்பும் நிகழ்வு நடைபெறும் என்று.” நீர் அவர்களுக்கு கூறுவீராக: “அது அண்மையில் இருக்கலாம் என்று.” ஏனெனில் வர இருப்பவை அனைத்தும் அண்மையிலே உள்ளன.