அல்-முக்தஸர்
قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِۦ فَلَا يَمْلِكُونَ كَشْفَ ٱلضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا ﴿٥٦﴾
தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: -“இணைவைப்பாளர்களே!- உங்கள் மீது தீங்கு இறங்கினால் அல்லாஹ்வை விடுத்து நீங்கள் கடவுள்களாக எண்ணுகின்ற தெய்வங்களை அழையுங்கள். அவை தமது இயலாமையினால் உங்களை விட்டும் தீங்கை அகற்றவோ அதனை மற்றவர்களுக்கு இடம்பெயரச் செய்யவோ சக்திபெற மாட்டா. இயலாதவர்கள் இறைவனாக இருக்க முடியாது.