அல்-முக்தஸர்
وَإِذْ قُلْنَا لِلْمَلَـٰٓئِكَةِ ٱسْجُدُوا۟ لِـَٔادَمَ فَسَجَدُوٓا۟ إِلَّآ إِبْلِيسَ قَالَ ءَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا ﴿٦١﴾
தூதரே!- நாம் வானவர்களிடம், “ஆதமுக்கு முகமன் கூறும் விதமாக (வணங்கும் விதமாக அல்லாமல்) அவருக்கு சிரம்பணியுங்கள்” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர்கள் அனைவரும் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து ஆதமுக்கு சிரம்பணிந்தார்கள். ஆனால் இப்லீஸ் கர்வத்தினால் சிரம்பணிய மறுத்துவிட்டான். “நீ மண்ணால் படைத்த மனிதனுக்கு நான் சிரம்பணிவதா? என்னை நீ நெருப்பால் படைத்துள்ளாய். நான் அவனைவிட சிறந்தவன்” என்று கூறினான்.