×
الإسراءவசனம் 64

அல்-முக்தஸர்

وَٱسْتَفْزِزْ مَنِ ٱسْتَطَعْتَ مِنْهُم بِصَوْتِكَ وَأَجْلِبْ عَلَيْهِم بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى ٱلْأَمْوَٰلِ وَٱلْأَوْلَـٰدِ وَعِدْهُمْ ۚ وَمَا يَعِدُهُمُ ٱلشَّيْطَـٰنُ إِلَّا غُرُورًا ﴿٦٤﴾

பாவத்துக்கு அழைக்கும் உன் குரலால் அவர்களில் உன்னால் ஏமாற்ற முடிந்தவர்களை ஏமாற்றிக்கொள். உனக்குக் கட்டுப்படுமாறு அழைப்பு விடுக்கும் உன் குதிரைப்படைகளையும் காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவி உன்பக்கம் அவர்களை ஈர்த்துக்கொள். மார்க்கத்திற்கு முரணான கொடுக்கல் வாங்கல்களை அவர்களுக்கு அலங்கரித்து அவர்களுடைய செல்வங்களில் கூட்டுச்சேர்ந்து கொள். தம்முடைய பிள்ளையல்லாதவர்களைப் பொய்யாக தமது பிள்ளையெ வாதிட வைத்தும், விபச்சாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெறச் செய்வதன் மூலமும் அல்லாஹ் அல்லாதவருக்கு அவர்களை அடிமைப்படுத்தி பெயர் வைப்பதன் மூலமும் அவர்களின் பிள்ளைகளிலும் பங்கெடுத்துக் கொள். பொய்யான வாக்குறுதிகளையும் தவறான ஆசைகளையும் அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டு. ஷைத்தான் அவர்களுக்கு அளிக்கும் வாக்குறுதி அவர்களை ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளே அன்றி வேறில்லை.