×
الإسراءவசனம் 77

அல்-முக்தஸர்

سُنَّةَ مَن قَدْ أَرْسَلْنَا قَبْلَكَ مِن رُّسُلِنَا ۖ وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيلًا ﴿٧٧﴾

உமக்குப் பின்னர் அவர்கள் சிறிது காலமே தங்கியிருப்பார்கள் என்ற தீர்ப்பு உமக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள் விஷயத்திலும் நடைபெற்று வருகின்ற அல்லாஹ்வின் வழிமுறையாகும். அது, ஒரு சமூகம் தம் தூதரை வெளியேற்றினால் அவர்களிடையே அல்லாஹ் வேதனையை இறக்குவான் என்பதாகும். -தூதரே!- நம்முடைய வழிமுறையில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். மாறாக அதனை நிலையானதாகக் காண்பீர்.