×
الإسراءவசனம் 82

அல்-முக்தஸர்

وَنُنَزِّلُ مِنَ ٱلْقُرْءَانِ مَا هُوَ شِفَآءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ ۙ وَلَا يَزِيدُ ٱلظَّـٰلِمِينَ إِلَّا خَسَارًا ﴿٨٢﴾

அறியாமை, நிராகரிப்பு, சந்தேகம் ஆகியவற்றிலிருந்து உள்ளங்களுக்கு நிவாரணியை நாம் குர்ஆனில் இறக்குகின்றோம். அதனைக் கொண்டு ஒதிப்பார்த்தால் உடல் ரீதியான நோய்களுக்கும் அதில் நிவாரணி உண்டு. அது நம்பிக்கைகொண்டு, அதன்படி செயல்படும் நம்பிக்கையாளர்களுக்கு அதில் அருளும் உண்டு. இந்தக் குர்ஆன் நிராகரிப்பாளர்களுக்கு அழிவைத்தான் அதிகப்படுத்தும். ஏனெனில் நிச்சயமாக அதனைச் செவியுறுவதே அவர்களுக்குக் கோபமூட்டுகிறது. அது அவர்கள் பொய்பிப்பதையும் புறக்கணிப்பதையும் அதிகப்படுத்துகிறது.