அல்-முக்தஸர்
قُل لَّوْ كَانَ فِى ٱلْأَرْضِ مَلَـٰٓئِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ ٱلسَّمَآءِ مَلَكًا رَّسُولًا ﴿٩٥﴾
தூதரே!- நீர் அவர்களுக்கு மறுப்புக் கூறுவீராக: “பூமியில் வானவர்கள் வாழ்ந்து உங்களைப்போன்று நிம்மதியாக அதில் நடந்து செல்பவர்களாக இருந்தால் நாம் அவர்களின்பால் வானவர்களைத் தூதர்களாக அனுப்பியிருப்போம். நிச்சயமாக அப்போதுதான் அவரால் தன் தூதை அவர்களுக்குப் புரிய வைக்க முடியும். நாம் அவர்களின்பால் மனித இனத்தைச் சார்ந்த ஒருவரை தூதராக அனுப்புவது அறிவுபூர்வமானதல்ல. அதுபோன்றுதான் உங்களின் நிலைமையும்.