×
الكهفவசனம் 10

அல்-முக்தஸர்

إِذْ أَوَى ٱلْفِتْيَةُ إِلَى ٱلْكَهْفِ فَقَالُوا۟ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا ﴿١٠﴾

தூதரே!- நம்பிக்கைகொண்ட இளைஞர்கள் தங்களின் மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தஞ்சமடைந்ததை நினைவுகூர்வீராக. அவர்கள் தங்கள் இறைவனிடம் பிரார்த்தித்தவாறு கூறினார்கள்: “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னித்து, எதிரிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றி உன் புறத்திலிருந்து அருளை எங்களுக்கு வழங்குவாயாக. நிராகரிப்பாளர்களைவிட்டு புலம்பெயர்ந்ததையும் நம்பிக்கைகொண்டதையும் சத்திய வழியை அடைந்ததாகவும் சரியான நிலைப்பாடாகவும் எங்களுக்கு ஆக்குவாயாக.