×
الكهفவசனம் 21

அல்-முக்தஸர்

وَكَذَٰلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوٓا۟ أَنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَأَنَّ ٱلسَّاعَةَ لَا رَيْبَ فِيهَآ إِذْ يَتَنَـٰزَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ ۖ فَقَالُوا۟ ٱبْنُوا۟ عَلَيْهِم بُنْيَـٰنًا ۖ رَّبُّهُمْ أَعْلَمُ بِهِمْ ۚ قَالَ ٱلَّذِينَ غَلَبُوا۟ عَلَىٰٓ أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِم مَّسْجِدًا ﴿٢١﴾

அவர்களைப் பல வருடங்கள் தூங்க வைத்து பின்னர் எழுப்பி எங்களுடைய வல்லமையை அறிவிக்கக்கூடிய நாம் செய்த வியக்கத்தக்க செயல்களைப்போல அந்த நகர மக்களுக்கும் அவர்களைக் குறித்து அறிவித்தோம். அது நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் உதவிசெய்வதாகவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதாகவும் அல்லாஹ் வழங்கிய வாக்குறுதி உண்மையே என்பதையும் சந்தேகமின்றி மறுமை நாள் வந்தே தீரும் எனவும் அவர்கள் அறிந்துகொள்வதற்காகவேயாகும். குகைவாசிகளின் விஷயம் வெளிப்பட்டு, அவர்கள் இறந்துவிட்ட பின் அவர்களுடைய விடயத்தையறிந்த மக்கள் அவர்களின் விஷயத்தில் என்ன செய்வது என கருத்துவேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் கூறினார்கள்: “அவர்கள் தங்கியிருந்த குகை வாயிலில் அவர்களைக் காக்கும் ஒரு கட்டடத்தை எழுப்புங்கள். இறைவனே அவர்களின் நிலைகளை நன்கறிந்தவன். அவர்களின் நிலை அவனிடத்தில் அவர்களுக்கு சிறப்பு இருக்கின்றது என்பதைக் காட்டுகிறது. அவர்களில் அறிவும் சரியான பிரச்சாரமும் அற்ற செல்வாக்கு உடையவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அவர்களைக் கண்ணியப்படுத்தும்பொருட்டு, அவர்கள் தங்கியிருந்த இடத்தை நினைவுபடுத்தும் பொருட்டு அதன் மீது ஒரு வணக்கஸ்தலத்தை அமைப்போம்.”