×
الكهفவசனம் 45

அல்-முக்தஸர்

وَٱضْرِبْ لَهُم مَّثَلَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَآءٍ أَنزَلْنَـٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخْتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ ٱلرِّيَـٰحُ ۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ مُّقْتَدِرًا ﴿٤٥﴾

தூதரே!- உலக இன்பங்களைக் கண்டு ஏமாறுபவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறுவீராக: அது அழிந்துவிடுவதிலும் விரைவாக தீர்ந்துவிடுவதிலும் மழை நீருக்கு ஒப்பானதாகும். நாம் அதனை வானத்திலிருந்து இறக்குகின்றோம். அந்த நீரின் மூலம் பூமியில் தாவரம் செழித்து வளர்கின்றது. பின்னர் அவை காற்றால் அடித்துச் செல்லப்படும் காய்ந்த சருகுகளாகி விடுகின்றன. அந்தப் பூமி பழைய நிலைக்கே திரும்பி விடுகிறது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். அவனுக்கு இயலாதது எதுவும் கிடையாது. அவன் தான் நாடியவற்றை உயிருடன் விட்டுவைக்கிறான். தான் நாடியவற்றை அழித்து விடுகிறான்.