×
الكهفவசனம் 51

அல்-முக்தஸர்

مَّآ أَشْهَدتُّهُمْ خَلْقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَا خَلْقَ أَنفُسِهِمْ وَمَا كُنتُ مُتَّخِذَ ٱلْمُضِلِّينَ عَضُدًا ﴿٥١﴾

என்னை விடுத்து நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக்கொண்ட இவர்கள் உங்களைப் போன்ற அடியார்கள்தாம். வானங்களையும் பூமியையும் படைத்தபோது நான் அவர்களை சாட்சியாக வைக்கவில்லை. மாறாக அப்போது அவர்கள் இருக்கவேயில்லை. அவர்களில் சிலரைப் படைத்தபோது சிலரை நான் சாட்சியாக வைக்கவில்லை. படைப்பதிலும் நிர்வகிப்பதிலும் நான் தனித்தவன். நான் வழிகெடுக்கும் மனித, ஜின் இனத்திலுள்ள ஷைத்தான்களை உதவியாளர்களாக ஆக்கிக் கொள்பவன் அல்ல. நான் உதவியாளர்களை விட்டும் தேவையற்றவன்.