×
الكهفவசனம் 57

அல்-முக்தஸர்

وَمَنْ أَظْلَمُ مِمَّن ذُكِّرَ بِـَٔايَـٰتِ رَبِّهِۦ فَأَعْرَضَ عَنْهَا وَنَسِىَ مَا قَدَّمَتْ يَدَاهُ ۚ إِنَّا جَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًا ۖ وَإِن تَدْعُهُمْ إِلَى ٱلْهُدَىٰ فَلَن يَهْتَدُوٓا۟ إِذًا أَبَدًا ﴿٥٧﴾

தன் இறைவனின் வசனங்களைக்கொண்டு அறிவுரை வழங்கப்பட்டபோது அதிலுள்ள தண்டனை பற்றிய எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் படிப்பினை பெறாமல் புறக்கணித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் வேறு யாரும் இல்லை. அவன் இவ்வுலக வாழ்வில் சேர்த்துவைத்த பாவங்களையும் நிராகரிப்பையும் மறந்துவிட்டான். அவற்றிலிருந்து அவன் மீளவில்லை. இத்தகைய பண்புடையவர்களின் உள்ளங்களில், குர்ஆனைப் புரிந்துகொள்ள முடியாதவாறு ஒரு திரையை நாம் ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் செவிகளில் அதனைக் கேட்க முடியாமல் ஒரு அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். அவர்கள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அதனைச் செவிமடுக்கமாட்டார்கள். நீர் அவர்களை ஈமானின் பக்கம் அழைத்தாலும் அவர்களின் உள்ளங்களில் திரையும் செவிகளில் அடைப்பும் இருப்பதால் ஒருபோதும் உமது அழைப்பிற்குப் பதிலளிக்க மாட்டார்கள்.