×
الكهفவசனம் 74

அல்-முக்தஸர்

فَٱنطَلَقَا حَتَّىٰٓ إِذَا لَقِيَا غُلَـٰمًا فَقَتَلَهُۥ قَالَ أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةًۢ بِغَيْرِ نَفْسٍ لَّقَدْ جِئْتَ شَيْـًٔا نُّكْرًا ﴿٧٤﴾

இருவரும் கப்பலில் இருந்து இறங்கி கடற்கரையோரமாக நடந்துசென்றார்கள். அப்போது பருவமடையாத ஒரு சிறுவன் மற்ற சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். களிர் அவனைப் பிடித்துக் கொன்றுவிட்டார். மூஸா அவரிடம் கூறினார்: “ஒரு பாவமும் அறியாத பருவமடையாத தூய்மையான சிறுவனைக் கொன்று விட்டீரே? நீர் தகாத காரியத்தைச் செய்துவிட்டீர்.