அல்-முக்தஸர்
وَأَمَّا ٱلْجِدَارُ فَكَانَ لِغُلَـٰمَيْنِ يَتِيمَيْنِ فِى ٱلْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُۥ كَنزٌ لَّهُمَا وَكَانَ أَبُوهُمَا صَـٰلِحًا فَأَرَادَ رَبُّكَ أَن يَبْلُغَآ أَشُدَّهُمَا وَيَسْتَخْرِجَا كَنزَهُمَا رَحْمَةً مِّن رَّبِّكَ ۚ وَمَا فَعَلْتُهُۥ عَنْ أَمْرِى ۚ ذَٰلِكَ تَأْوِيلُ مَا لَمْ تَسْطِع عَّلَيْهِ صَبْرًا ﴿٨٢﴾
நான் சரிசெய்ததற்காக ஆட்சேபனை செய்த சுவரின் விவகாரம் என்னவென்றால், அது நாம் சென்ற ஊரில் தந்தையை இழந்த இரு அநாதைச் சிறுவர்களுக்கு உரியது. அவர்களின் தந்தை அந்த சுவருக்குக் கீழே அவர்களுக்காக செல்வத்தைப் புதைத்து வைத்துள்ளார். அவர்களின் தந்தை நல்லவராக இருந்தார். -மூஸாவே!- அவர்கள் பக்குவ வயதை அடைந்து பெரியவர்களானதும் புதைக்கப்பட்ட செல்வத்தை அதற்குக் கீழிருந்து எடுக்க வேண்டும் என்று உம் இறைவன் நாடினான். தற்போது அந்த சுவர் விழுந்துவிட்டால் அந்த செல்வம் வெளிப்பட்டு வீணாகிவிடும். அவர்கள் மீதுள்ள கருணையால் உம் இறைவன் செய்த ஏற்பாடே இதுவாகும். நான் சுயமாக எதையும் செய்யவில்லை. இதுதான் உம்மால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களுக்கான விளக்கமாகும்.