×
الكهفவசனம் 98

அல்-முக்தஸர்

قَالَ هَـٰذَا رَحْمَةٌ مِّن رَّبِّى ۖ فَإِذَا جَآءَ وَعْدُ رَبِّى جَعَلَهُۥ دَكَّآءَ ۖ وَكَانَ وَعْدُ رَبِّى حَقًّا ﴿٩٨﴾

துல்கர்னைன் கூறினார்: “இந்தத் தடுப்பு என் இறைவனின் கருணையாகும். இது யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்திற்கும் அவர்கள் பூமியில் குழப்பம் விழைவிப்பதற்கும் மத்தியில் தடையாக இருக்கின்றது. அதிலிருந்து அவர்களை தடுக்கிறது. மறுமை நாளுக்கு முன்னர் அவர்கள் வெளியாவதற்கு என் இறைவன் குறித்த நேரம் வந்துவிட்டால் அது பூமியோடு தரைமட்டமாகிவிடும். (அந்த மதில்) தரைமட்டமாகி யஃஜுஜ், மஃஜுஜ் என்ற கூட்டத்தினர் வெளிப்படுவார்கள் என்ற அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும். இதில் எந்த மாறுபாடும் இல்லை.