அல்-முக்தஸர்
وَبَرًّۢا بِوَٰلِدَيْهِ وَلَمْ يَكُن جَبَّارًا عَصِيًّا ﴿١٤﴾
அவர் தம் தாய், தந்தையருக்கு உபகாரம் செய்யக்கூடியவராகவும், மிருதுவாக, அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளக்கூடியவராகவும் இருந்தார். அவர் தம் இறைவனுக்கும், அவ்விருவருக்கும் கட்டுப்படாமல் கர்வம் கொள்ளக்கூடியவராக இருக்கவில்லை. இறைவனின் கட்டளைக்கோ, தாய், தந்தையரின் கட்டளைக்கோ மாறாகச் செயல்படக்கூடியவராகவும் இருக்கவில்லை.