அல்-முக்தஸர்
أَسْمِعْ بِهِمْ وَأَبْصِرْ يَوْمَ يَأْتُونَنَا ۖ لَـٰكِنِ ٱلظَّـٰلِمُونَ ٱلْيَوْمَ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ ﴿٣٨﴾
மறுமை நாளில் அவர்கள் எவ்வளவு சிறந்த முறையில் கேட்பார்கள், பார்ப்பார்கள்! கேட்பது பயனளிக்காத போது கேட்பார்கள். பார்ப்பது பயனளிக்காத போது பார்ப்பார்கள். ஆனால் இவ்வுலக வாழ்வில் அநியாயம் இழைத்தவர்கள் நேரான வழியை விட்டு தெளிவான வழிகேட்டில் உள்ளார்கள். மறுமைக்காக அவர்கள் எந்த முன்னேற்பாடும் செய்வதில்லை. தங்களின் அநியாயத்தில் இருந்து கொண்டிருக்கும் போதே திடீரென அது அவர்களிடம் வந்து விடும்.