அல்-முக்தஸர்
أَلَمْ تَرَ أَنَّآ أَرْسَلْنَا ٱلشَّيَـٰطِينَ عَلَى ٱلْكَـٰفِرِينَ تَؤُزُّهُمْ أَزًّا ﴿٨٣﴾
தூதரே!- நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை அனுப்பி நிராகரிப்பாளர்களின் மீது அவர்களை ஆதிக்கம் கொள்ளச் செய்கிறோம். அவர்கள் இந்த நிராகரிப்பாளர்களை பாவங்கள் செய்வதன் பக்கமும் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் தடுப்பதன் பக்கமும் நன்கு தூண்டுகிறார்கள்.