அல்-முக்தஸர்
وَقَالَتِ ٱلْيَهُودُ لَيْسَتِ ٱلنَّصَـٰرَىٰ عَلَىٰ شَىْءٍ وَقَالَتِ ٱلنَّصَـٰرَىٰ لَيْسَتِ ٱلْيَهُودُ عَلَىٰ شَىْءٍ وَهُمْ يَتْلُونَ ٱلْكِتَـٰبَ ۗ كَذَٰلِكَ قَالَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ مِثْلَ قَوْلِهِمْ ۚ فَٱللَّهُ يَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ فِيمَا كَانُوا۟ فِيهِ يَخْتَلِفُونَ ﴿١١٣﴾
‘கிருஸ்தவர்கள் சரியான மார்க்கத்தில் இல்லை’ என்று யூதர்கள் கூறுகிறார்கள். ‘யூதர்கள் சரியான மார்க்கத்தில் இல்லை’ என்று கிருஸ்தவர்கள் கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் தாம் நிராகரித்தவை உண்மையானவையே என்பதையும், தூதர்கள் அனைவரையும் பாகுபாடின்றி நம்பிக்கைகொள்ள வேண்டும் என்பதையும் தமது வேதத்தில் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் இந்தச் செயல், தூதர்கள் அனைவரையும் அவர்களுக்கு இறக்கப்பட்ட வேதங்கள் அனைத்தையும் நிராகரித்த, எதுவும் அறியாத இணைவைப்பாளர்களின் செயலை ஒத்திருக்கிறது. கருத்துவேறுபட்ட இவர்கள் அனைவரிடையே மறுமைநாளில் தன் அடியார்களுக்கு அறிவித்த நீதியைக்கொண்டு அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அல்லாஹ் இறக்கிய அனைத்தின்மீதும் நம்பிக்கைகொள்ளாமல் எந்த வெற்றியும் இல்லை என்பதே அந்த நீதியாகும்.